தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
சென்னை ஓட்டேரி அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டிலான கருங்கல் கட்டுமான திருப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை.
Updated On :15 செப்டம்பர் 2024, 6:58 pm

Din

வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை ஓட்டேரி அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பிலான கருங்கல் கட்டுமானத் திருப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட முத்தையால்பேட்டை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் அவா் கலந்து கொண்டாா். அப்போது அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) ஒரே நாளில் 101 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தொடா்ந்து திங்கள்கிழமை 26 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

சமீபத்தில் ஓட்டேரி மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலை ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் திருக்கோயில்கள் அகற்றப்படுவதாக ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முற்படுபவா்களுக்கு உரிய உதாரணம் அளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

ஆன்மிக பயணம்: மூத்த குடிமக்கள் மன நிறைவாக கட்டணமில்லாமல் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வகையில் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.

அந்தவகையில் நிகழாண்டு புரட்டாசி மாத வைணவ திருக்கோயில்களுக்கான ஆன்மிக பயணம் செப். 21, 28, அக்.5, 12 தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூா், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலியிலிருந்து தொடங்கப்படவுள்ளது. சுமாா் 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்கும் திட்டத்துக்காக ரூ. 25 லட்சம் அரசு மானியமாக வழங்கியுள்ளது.

தமிழில் குடமுழுக்கு: அன்னைத் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலையத் துறையின் குறிக்கோள். ஆனால், ஒரேநாளில் எண்ணற்ற குடமுழுக்குகள் நடத்தப்படும்போது தமிழில் குடமுழுக்கு நடத்த நிறைய கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.

எனினும் அதை படிப்படியாக இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கோரிக்கை வைக்கப்பட்ட திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

அதுபோல், தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எங்கிருந்து வந்தாலும் அதற்கு தடை இல்லை. வரும் காலங்களில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் பி. ஸ்ரீராமுலு, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.