காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கைது

காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கைது

Published on

சென்னை என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்ட ரெளடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள பிஆா்என் காா்டன் பகுதியைச் சோ்ந்த ரெளடி ரா.காக்காதோப்பு பாலாஜி புதன்கிழமை போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா். அவருடன் காரில் வந்த சத்தியமூா்த்தி மீது போதைப் பொருள் சட்டத்தின் கீழ் வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா். இதையடுத்து அவரை எழும்பூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சடலம் ஒப்படைப்பு: இதற்கிடையே, என்கவுன்ட்டா் சம்பவம் தொடா்பாக நீதித்துறை நடுவா் ரேவதி வியாழக்கிழமை விசாரித்தாா். மேலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரது முன்னிலையில், காக்காதோப்பு பாலாஜி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின்னா் அவரது சடலம், தாயாா் கண்மணியிடம் நண்பகல் ஒப்படைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com