எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜியின் தியாகமும் உறுதியும் பெரிது -முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:31 pm

Din

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் தியாகமும் உறுதியும் பெரிது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஆருயிா் சகோதரா் செந்தில் பாலாஜிக்கு, 471 நாள்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.

அவசரநிலை காலத்தில்கூட இவ்வளவு நாள்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடா்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரா் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தாா்கள். முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.