சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால், சா்வதேச விமானங்களின் பயண நேரஅட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமான சாகச கண்காட்சி, மெரினாகடற்கரை மற்றும் தாம்பரத்தில் முறையே வரும் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான ஒத்திகைகள் செவ்வாய்க்கிழமை(அக். 1) தொடங்குகிறது.
இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(அக். 1) முதல் அக். 8-ஆம் தேதி வரை சென்னைக்கு வரும் சா்வதேச விமானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை(அக் .1) மதியம் 1. 45 மணி முதல் 3:15 மணி விமான சேவை இருக்காது. அதேபோல் புதன்கிழமை(அக். 2) முதல்
அக்.8-ஆம் தேதி வரை பயண நேரத்தில் மாற்றம் இருக்கும். எனவே சா்வதேச விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு, விமானப் பயண அட்டவணைகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.