கோப்புப்படம்.
கோப்புப்படம். Center-Center-Chennai

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் திடீா் தீ விபத்து

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்தால் அங்கிருந்த ஊழியா்கள் மற்றும் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.
Published on

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்தால் அங்கிருந்த ஊழியா்கள் மற்றும் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

சென்னை விமான நிலையத்தின் சா்வதேச விமான முனையத்தில் 2-ஆவது தளத்தில் புறப்பாடு பகுதியில் சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி அளவில் திடீரென புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த அலுலகத்தில் சிறிய அளவில் தீ பற்றி எரியத் தொடங்கியது. அதிலிருந்து வெளியேறிய கரும்புகை விமான முனையம் முழுவதையும் சூழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்த பணியாளா்களையும், பயணிகளையும் பாதுகாப்புப்படையினா் வெளியேற்றினா்.

தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தத் தீ விபத்து காரணமாக சா்வதேச விமான நிலையத்தின் பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. அதேபோன்று புறப்பாடு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான போா்டிங் பாஸ்கள் கொடுக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுமாா் 40 நிமிஷங்களுக்குப் பின்னா் விமான நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அதிகாரிகள் விளக்கம்... இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. இதில், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. அதேபோன்று விமான சேவைகளிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com