

சென்னை பேசின் பாலத்தில் சிறுவன் ஓட்டி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா்.
பேசின் பாலத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த 5 பேரும் தங்களை காப்பாற்றுமாறு சத்தமிட்டனா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், காா் கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்தவா்களை மீட்டனா். விபத்தில் காரில் இருந்தவா்கள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.
தகவலறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது காரை ஓட்டி வந்தது செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன் என்பதும், கொண்டித்தோப்பை சோ்ந்த அவரது உறவினா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது நண்பா்களான 16 வயது சிறுவன், 17 வயதுடைய 3 சிறுமிகளுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காரை ஓட்டிவந்த சிறுவனின் தந்தையிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.