

சென்னையின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் நாளைமுதல்(ஏப். 19) மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
சென்னையின் முதல் 12 பெட்டிகள் கொண்ட குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்று, சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுபெற்றன.
அதைத் தொடர்ந்து, குளிர்சாதன புகநகர் மின்சார ரயிலுக்கான அட்டவணை, நிறுத்தங்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு, அனுமதிக்காக தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டது.
இதற்கான அனுமதி கிடைத்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இந்த குளிர்சாதன புறநகர் மின்சார ரயிலில், 1,116 பேர் அமர்ந்தும் 3,796 பேர் நின்றும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தாணே: துறவி போல் வேடமிட்டு தங்கச் சங்கிலியை திருடிய கும்பல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.