

தாணேவில் துறவி போல் வேடமிட்டு முதியவரிடம் தங்கச் சங்கிலியை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவலியில் 75 வயது முதியவரிடம் இருந்து ரூ.1.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மூன்று பேர் திருடியதாகக் கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவர் துறவி போல உடையணிந்திருந்தார் என்று தாணே போலீஸ் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை கோனிபலாவாவில் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது, மூன்று பேரும் காரில் இருந்து இறங்கி, பாதிக்கப்பட்ட மாதவ் ஜோஷியை ஆசீர்வதிக்க அவரை நிறுத்தினர்.
பின்னர் மதப் பிரச்னைகள் குறித்து அவருடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, மூவரும் அவரது ரூ.1.2 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலி மற்றும் மோதிரத்தை திருடினர்.
தன்னுடைய நகை திருடப்பட்டதை ஜோஷி உணரும் முன்பே காரில் வேகமாக தப்பி ஓடிவிட்டனர் என்றார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் குஜராத், புணே மற்றும் சோலாபூரில் வசிப்பவர்கள் என்றும் 24 மணி நேரத்திற்குள் அவர்கள் பிடிபட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.