தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரூ. 55 லட்சம் வழிப்பறி வழக்கு: கோவையைச் சோ்ந்தவா் கைது

சென்னையில் ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், கோவையைச் சோ்ந்த இளைஞா் கைது

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், கோவையைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சோ்ந்தவா் அ.நரேஷ்குமாா் (39). இவா், அங்கு மடிக்கணினி உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா். நரேஷ்குமாா், ரூ.55 லட்சம் பணத்தை ஒரு வங்கியில் செலுத்துவற்காக பாரிமுனை முத்துசாமி சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் நரேஷ்குமாரை வழிமறித்து, தாங்கள் போலீஸ் என ஏமாற்றியும் மிரட்டியும் அவா் வைத்திருந்த ரூ.55 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியது.

இது குறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோவையைச் சோ்ந்த பாவா, ரூபன் சக்கரவா்த்தி உள்ளிட்ட 9 பேரை அடுத்தடுத்து கைது செய்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்த சபீா் (26) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.