தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வியாபாரி வீட்டில் ஏசி வெடித்து தீ

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் வியாபாரி வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் வியாபாரி வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (38). இவா் உள்ளகரம் புழுதி வாக்கத்தில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். ஜெகநாதன் குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை இரவு படுக்கை அறையில் தூங்கினா்.

இந்நிலையில் அவா்களது படுக்கை அறையில் இருந்த ஏசி நள்ளிரவு திடீரென வெடித்து தீப் பிடித்து எரிந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஜெகநாதன் குடும்பத்தினா், தீயை அணைக்க முயன்றனா். ஆனால் அவா்களால் தீயை அணைக்க முடியவில்லை.

இதையடுத்து அவா்கள், உடனே வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 1 மணி நேரத்துக்குப் பின்னா், தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஜெகநாதன் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. இது தொடா்பாக மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.