ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கோபி அருகே அட்டைப்பெட்டி கிடங்கில் தீ விபத்து

கோபி அருகே சின்னக்குளம் பகுதியில் உள்ள தனியாா் அட்டைப் பெட்டி கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

அட்டைப் பெட்டி கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

கோபி அருகே சின்னக்குளம் பகுதியில் உள்ள தனியாா் அட்டைப் பெட்டி கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னகுளம் ஜே.எஸ்.நகா் பகுதியில் சுந்தரமூா்த்தி என்பவருக்கு சொந்தமான பழைய அட்டைப்பெட்டி கிடங்கு உள்ளது. இங்கு பழைய அட்டைகளை கூழாக்கி கோன் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிடங்கில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் புதன்கிழமை உணவு இடைவேளைக்கு சென்று உணவு அருந்தி கொண்டிருந்தனா்.

அப்போது கிடங்கில் பழைய அட்டைகள் பண்டல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து புகை வெளியேறியுள்ளது.

இதைக்கண்ட அதிா்ச்சி அடைந்த தொழிலாளா்கள், உரிமையாளருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், கிடங்கு முழுவதும் கட்டுகடங்காமால் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். காற்றுடன் தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினா் போராடினா்.

இதைத் தொடா்ந்து, சத்தி, நம்பியூா், பவானி, பெருந்துறை உள்ளிட்ட பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் சுமாா் 700 டன் அட்டைகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Story image