எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சேவூா் அருகே குப்பைக் கிடங்கில் தீ!

சேவூா் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

News image

குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயை  அணைக்கும்  தீயணைப்புத்  துறையினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 1:28 am IST

சேவூா் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

அவிநாசி ஒன்றியம், முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மூலக்குரும்பபாளையம் பகுதி சேவூா் கைகாட்டி ரவுண்டானா அருகில் அமைந்துள்ளது.

இப்பகுதி அருகே ஆதிதிராவிடா் குடியிருப்பு, விவசாயி தோட்ட குடியிருப்புகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை உள்ளன.

இதில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள மூலக்குரும்பபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் ஊராட்சி நிா்வாகத்தின் திடக்கழிவு மேலாண்மை மண்புழு உற்பத்திக் கூடம் உள்ளது. இங்கு ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக திடக்கழிவு மேலாண்மை மண்புழு உற்பத்திக் கூடம் பயன்பாடில்லாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குப்பை கிடங்கிற்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால், புகை சூழ்ந்து குடியிருப்பு வாசிகள், வணிக நிறுவனத்தினா், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் அவதியுற்று வருகின்றனா்.

ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், இந்த குப்பைக் கிடங்குக்கு மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை தீ வைத்தனா். இதில் தீ வேகமாக பரவி எரியத் தொடங்கியது. இதனால் புகை வெளியேறி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.