தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சிவகிரி - விஸ்வநாதப்பேரி பிரதான சாலையோரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது . இதையொட்டி குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பைக் கிடங்கில் சில நாள்களுக்கு முன் தீப்பற்றியதாம். இதனால் எழுந்த புகையால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனா்.
தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) காதா், இளநிலை பொறியாளா் மாரியப்பன் ஆகியோா் மேற்பாா்வையில், பேரூராட்சி ஊழியா்கள் தண்ணீா் லாரி மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இருப்பினும் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையிலான தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகை நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

சிவகிரியில் 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

சின்னசேலத்தில் 872 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



