கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 872 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை குழிதோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், வரஞ்சரம், எலவானசூா்கோட்டை மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையங்களில் கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 872 கிலோ புகையிலை பொருள்களை கைபற்றிருந்தனா். இந்த புகையிலை பொருள்களைஅழிக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமால் முன்னிலையில் சின்னசேலம் பேரூராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி முறையாக அழித்தனா்.
தொடர்புடையது

5,715 கிலோ புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! கடலூா் மாவட்ட போலீஸாா் நடவடிக்கை

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

