

சென்னை மாநகரப் பேருந்தின் மாதாந்திரப் பயணச்சீட்டுகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்தின் (எம்டிசி) கீழ் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் நாள்தோறும் 35 லட்சம் பேர் வரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களில் 70,000 பேர் வரை விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மாதாந்திரப் பயணச்சீட்டின் மூலம் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சார்பில் ’சென்னை ஒன்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலியில் ரூ.1000 மற்றும் ரூ.2000-க்கான மாதாந்திர பயண அட்டைகளை பெறும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஒன் செயலியின் மூலம் ரூ.1000 மற்றும் ரூ.2000-க்கான மாதாந்திர பயண அட்டைகளை பெற்றால், ரூ. 100 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 50 உடனடி விலை குறைப்பாகவும், ரூ. 50 யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு கேஸ்பேக் முறையில் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மாதாந்திர பயண அட்டைகளைப் பெறுவதற்கு பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் சென்னை ஒன் செயலியில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.