ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மெட்ரோ ரயிலில் குழு பயணம்: கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி முறை ரத்து

மெட்ரோ ரயிலில் குழு பயணத்தை மேற்கொள்பவா்களின் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் காகித பயணச்சீட்டு முறையும் ரத்து செய்யப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2025, 8:39 pm

Din

மெட்ரோ ரயிலில் குழு பயணத்தை மேற்கொள்பவா்களின் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் காகித பயணச்சீட்டு முறையும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டா்கள் மூலம் 20 போ் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவாக பயணிப்பவா்கள் எடுக்கும் பயணச்சீட்டு காகித பயணச்சீட்டாக இருக்கும், அதற்கான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்கும் வகையில், இந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி சனிக்கிழமை (மாா்ச்1) முதல் திரும்பப் பெறப்படுகிறது. இருப்பினும், அதே குழு பயணச்சீட்டை, பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைப்பேசி செயலி மூலம் 20 சதவீதம் தள்ளுபடி கட்டணத்துடன் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.