சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...

சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு..
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
Updated on
1 min read

சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் நகரத்துக்குள் வராமல் புறவழிச் சாலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இன்றுமுதல் பேருந்து, ரயில், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து கூடுதல் அரசுப் பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோருக்கு வழித்தட மாற்றம் செய்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வெளியூர் செல்வோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, (ஓஎம்ஆா்) திருப்போரூா் - செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெருங்களத்தூர் அருகே ரயில்வே பால வேலைகள் நடைபெற்று வருவதால் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், மதுரவாயல் புறவழிச்சாலை மூலம் வெளியேறுவதையும் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com