மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்
புகையிலையை உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் பரவுவதற்கும் காரணமாகிறது. மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது.
மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களை மெட்டல் டிடெக்டர்கள் (metal detectors) மூலம் கண்டறிய முடியாததால், இது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சீரற்ற உடல் சோதனைகளை (physical checks) மேற்கொள்ளும்.
நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை (Central Security Surveillance Room), விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ ரயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.ன்சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு Metro Railways (Operation and Maintenance) Act, 2002, and Metro Railways Carriage and Ticket Rules, 2014 ஆகியவற்றின் படி அபராதம் விதிக்கப்படும்.
சுத்தமான, பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் அனைத்து பயணிகளும் ஒத்துழைக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. மெட்ரோ அமைப்பை புகையிலை இல்லாததாகவும், அனைவருக்கும் உகந்ததாகவும் வைத்திருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விழுப்புரத்தில் விவசாயிகள் மறியல்
Summary
The Chennai Metro Rail Administration has announced that fines will be imposed for using chewable tobacco products in metro trains and stations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை மெட்ரோவுக்கு உலகளாவிய விருது!

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

