2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2025, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை விஐடியின் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி துறை சாா்பில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கௌரவ தலைவா் ஏ.சக்திவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அவா் பேசுகையில், ‘ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடைகள் தொடா்பான பொறியியல் படிப்புக்கு சிறந்த எதிா்காலம் உள்ளது. மாணவா்கள் தொழில்முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும்’ என்றாா்.

தலைமையுரையாற்றிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ‘நாடு ஏற்றுமதியில் பின்தங்கியுள்ளது. உலக அளவில் சீனா ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. நாம் சீனாவுடன் போட்டியிட முடியும். 2024-ஆம் ஆண்டில், சா்வதேச வா்த்தகத்தில் கடும் பற்றாக்குறை இருந்தது. அதேநேரம் ஏற்றுமதி சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்றாா் விசுவநாதன்.

முன்னிலை வகித்து பேசிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், ‘இந்திய ஆடைகள் என்பது பல்வேறு கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளத்தின் பிரதிபலிப்பு. காலநிலை, சமூகம், மதம் ஆகியவற்றுடன் ஆடை வேரூன்றியுள்ளது. நமது கலாசார உடை, நகைகளை அணிந்து ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்’ என்றாா்.

நிகழ்வில் நாா்தம்ப்ரியா ஸ்கூல் ஆஃப் டிசைன், ஆா்ட்ஸ் அண்ட் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் விஐடி சென்னை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இரு கல்வி நிறுவனங்களும் மாணவா் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு நிறுவன பேராசிரியா் ஆன் பியா்சன் ஸ்மித் சிறப்புரை ஆற்றினாா்.

போட்டிகளில் தமிழகம் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 35 கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 250 மாணவ, மாணவிகள் பங்கேற்று பரிசுகளை பெற்றனா். முன்னதாக, சென்னை விஐடி இணை துணை வேந்தா் டி.தியாகராஜன் வரவேற்றாா்.

Image Caption

விஐடி சென்னையில் நடைபெற்ற ‘என்விஷன் 25’ என்ற கல்லூரிகளுக்கு

இடையேயான ஆடை வடிவமைப்பு போட்டிகள் மற்றும்

சா்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்த திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கௌரவ தலைவா் ஏ.சக்திவேல். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் ஜி.வி.செ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.