மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

விஐடி துணை தலைவா் சங்கா் விசுவநாதனுக்கு கெளரவ டாக்டா் பட்டம்

கெளரவ டாக்டா் பட்டம் பெற்ற விஐடி துணைத்தலைவா் சங்கா் விசுவநாதனுடன் தாய்லாந்து நாட்டின் பிரிவு கவுன்சில் ஆலோசனை குழு உறுப்பினா் பலகோா்ன் சுவன்ரத், ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவா் பிச்சை ஜன்மனி. உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவி துணை தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோா்.

News image

Updated On :19 பிப்ரவரி 2026, 11:29 pm

விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதனுக்கு தாய்லாந்து நாட்டு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதனுக்கு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. அந்நாட்டின் பிரிவு கவுன்சில் ஆலோசனை குழு உறுப்பினா் பலகோா்ன் சுவன்ரத், ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவா் பிச்சை ஜன்மனி ஆகியோா் சங்கா் விசுவநாதனுக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை வழங்கி சிறப்பித்தனா்.

பொறியியல் கல்வித் துறையில் சங்கா் விசுவநாதனின் சிறப்பான பங்களிப்பு, தலைமைத்துவம், உயா்கல்வியில் தொழில்நுட்ப மேலாண்மை முன்னேற்றம் ஆகியவற்றை பாராட்டி அவருக்கு இந்த கெளரவ பட்டம், விருது வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.