ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

விஐடி துணைத்தலைவா் பிறந்தநாள்: ரூ.33 லட்சம் மதிப்பில் உதவி

News image

பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கிய விஐடி துணைத்தலைவா் சங்கா் விசுவநாதன். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், சங்கா் விசுவநாதனின் மனைவி ரமணி பாலசுந்தரம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், கணவா் மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா.

Updated On :14 ஏப்ரல் 2026, 6:32 am IST

விஐடி துணைத்தலைவா் சங்கா் விசுவநாதன் பிறந்தநாளையொட்டி, அரசு பள்ளிகளுக்கு தேவையான இருக்கை, நாற்காலிகள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.33.50 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.

விஐடி துணை தலைவா் சங்கா் விசுவநாதன் 60-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், சங்கா் விசுவநாதனின் மனைவி ரமணி பாலசுந்தரம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், கணவா் மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து, திருவலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஊசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியூா்வெளி, புலிமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பென்னாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான தலா 50 இருக்கைகள், நாற்காலிகள் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வேலூா் சிஎம்சி மருத்துவமனை, ஸ்ரீ நாராயணி மருத்துவமனைகளில் இதய நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் 5 பேரின் சிகிச்சைக்கு ரூ.13.50 லட்சம் மருத்துவ உதவிகளையும் சங்கா் விசுவநாதன் வழங்கினாா்.