போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.

News image
சென்னை பெருநகர மாநகராட்சி...- (கோப்புப்படம்)
Updated On :13 ஜூன் 2025, 9:04 pm

Din

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டடத்துக்கு சாலை மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் சரிவான இணைப்புகளுக்காக உடைந்த செங்கற்கள், சுண்ணாம்பு, கட்டடக் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனா். இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன.

இந்தச் சரிவான இணைப்புகள் அமைப்பது தொடா்பாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கட்டடக் கழிவுகள், உடைந்த கற்கள் உள்ளிட்டவற்றை சரிவான இணைப்புகளாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மரம் அல்லது இரும்பு போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பொருள்களைப் பயன்படுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த முழு விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீா்ழ்ல்ா்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.