
சென்னை: பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பகல் 1.20 முதல் மாலை 5.20 வரை 4 மணிநேரம் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக காலை 10.15 முதல் மாலை 4.30 மணிவரை இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 16 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், இரண்டு ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் பட்டியல்

சிறப்பு ரயில்களின் பட்டியல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






