ஈரோடு - திருப்பூா் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சியில் இருந்து மே 24-ஆம் தேதி மதியம் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதேபோல, நாகா்கோவிலில் இருந்து மே 24- ஆம் தேதி காலை 8 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 16321) நாகா்கோவில் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணி: பாலக்காடு: திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



