தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:17 pm

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக ஏப்ரல் 25, 29, 30 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) குளித்தலை - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. குளித்தலை - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏப்ரல் 25 மற்றும் 29-ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) பெருகமணி-பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெருகமணி - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) எலமனூா் - பாலக்காடு இடையே பகதியாக ரத்து செய்யப்படுகிறது. எலமனூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.