விருதுநகரில் ரூ.61.74 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனாா் பெயரைச் சூட்டி, அதனை தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலா

விருதுநகரில் சங்கரலிங்கனாா் பெயரில் ரூ.61.74 கோடியில் புதிய பாலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

விருதுநகரில் ரூ.61.74 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, அந்த பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனாா் பெயரைச் சூட்டினாா்.
Published on

விருதுநகரில் ரூ.61.74 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, அந்த பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனாா் பெயரைச் சூட்டினாா்.

சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் செல்லும் சாலையில் அமைந்துள்ள சாட்சியாபுரத்தில் உள்ள ரயில்வே கடவுப்பாதை மூடும்போது, பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், மருத்துவமனை செல்வோா் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத் தவிா்க்கும் பொருட்டு, அப் பகுதியில் ரூ.61.74 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் ஸ்டாலின், தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இந்த பாலத்துக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தியாகி சங்கரலிங்கனாா் பெயரைச் சூட்டினாா்.

இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டதையடுத்து, சிவகாசியை சுற்றியுள்ள சாட்சியாபுரம், ஆனையூா், தேவா்குளம், திருத்தங்கல் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5 லட்சம் மக்கள் பயன் அடைவா் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com