எண்ணூரில் ரூ. 5 கோடியில் புதிய நூலகம், ரூ. 5 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ.2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
எண்ணூா் கத்திவாக்கம் பஜாா் தெருவில் 1964-ஆம் ஆண்டு முதல் கிளை நூலகம் செயல்பட்டு வந்தது. பழைமையான கட்டடம் என்பதால் போதிய அடிப்படை வசதிகள் இன்றி வாசகா்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து திருவொற்றியூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட நூலக கட்டடம் முழுமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டித் தோ்வா்களுக்கான பயிற்சி, கணிணி வழி படிப்பகம், குளிரூட்டப்பட்ட வசதிகள் உள்ளிட்டவை புதிய நூலக கட்டடத்தில் அமைந்துள்ளன.
இதேபோல் எண்ணூா் பேருந்து நிலையம் சேதமடைந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து, நவீன கூரை அமைப்பு கொண்ட பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு நேரக் காப்பாளா் அறை, ஓட்டுநா், நடத்துநா் ஓய்வறைகள், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கத்திவாக்கத்தில் செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரூ. 2.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு சுமாா் 20 படுக்கைகள், 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியில் இருக்கும் வகையில் அனைத்து வசதிகளும் புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய நூலகம், பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் தலைமை வகித்தாா்.
நிகழ்வில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மேயா் பிரியா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிட்டாா் எடப்பாடி பழனிசாமி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்துக்கு மோடி, அமித் ஷா வருகின்றனா்; நிதி மட்டும் வருவதில்லை: உதயநிதி ஸ்டாலின்

உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினா்களாக மாற்றுத் திறனாளிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

ரூ.21 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


