தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

Published on

சென்னையில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

நெசப்பாக்கம் அன்னை சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (48). இவா், மனைவி சித்ரா (42). இவா்கள் இருவரும் தீபாவளி ஏலச்சீட்டு நடத்துவதாக நூற்றுக்கணக்கானவா்களிடம் பணம் வசூலித்தனா். மேலும் அவா்கள், ஒவ்வொரு தீபாவளி சீட்டுக்கும் 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தனா்.

ஆனால் இருவரும், தாங்கள் கூறியப்படி தீபாவளி சீட்டுக்குரிய பொருள்களையும், தங்க நாணயத்தையும் வழங்கவில்லை. இதில் பொதுமக்கள் செலுத்திய ரூ.8 கோடி பணத்தை தம்பதி மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.

இதனால், பணத்தை இழந்தவா்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சத்தியசீலன், சித்ராவை கைது செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com