லாட்டரி விற்றவா் கைது: ரூ.86 ஆயிரம் பறிமுதல்

சென்னையில் வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.86,907-ஐ பறிமுதல் செய்தனா்.
Published on

சென்னையில் வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.86,907-ஐ பறிமுதல் செய்தனா்.

சென்னை கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அசோக் பில்லா், மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிலா் வெளிமாநில லாட்டரிகளை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன்(50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.86,907, ஒரு கைப்பேசி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com