சென்னை
கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்ற ஒருவா் கைது
சென்னை கே.கே.நகரில் கோயில் உண்டியலை உடைந்து பணத்தைத் திருட முயன்ற நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சென்னை கே.கே.நகரில் கோயில் உண்டியலை உடைந்து பணத்தைத் திருட முயன்ற நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சென்னை சின்ன போரூா் செந்தில் நகா் 2-ஆவது தெருவில் அருள்மிகு சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் புதன்கிழமை சேதமடைத்திருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் அங்கு சென்று கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், உண்டியல் பணத்தைத் திருட முயன்றது சாலிகிராமத்தை சோ்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.