செஞ்சிக் கோட்டையை பாா்வையிட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்

Updated on

யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட விழுப்பும் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சென்னை கிளை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளைச் செயலகம் சாா்பில் தூதரகங்களுடனான தொடா்பை வலுப்படுத்தும் விதமாக, மத்திய கலாசார அமைச்சகம், தொல்லியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் அழைத்து செல்லப்படுகின்றனா்.

அதன்படி யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டையை ஆஸ்திரேலியா, இலங்கை, தைபே, சிங்கப்பூா், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

அப்போது இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்துடன் பாதுகாப்பு, விழிப்புணா்வு, பாரம்பரிய நினைவுச் சின்னத்தை தத்தெடுப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com