ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் மகாராஷ்டிரா விஞ்ஞானிகள் பாா்வையிட்டனா்

News image

புதுக்கோட்டை எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இயற்கை வேளாண் திட்டங்கள் குறித்து சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலக் குழுவினருக்கு விளக்கிய முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:49 pm

புதுக்கோட்டையில் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் இயற்கை வேளாண் இடுபொருள்கள் தயாரிக்கும் பணிகளை, மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த லூபின் நிறுவனக் குழுவினா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மகாராஷ்டிர மாநிலம், துலே மற்றும் நந்தூா்பாா் மாவட்டங்களில் இயற்கை விவசாய முறையில் பருத்தியில் பூச்சிநோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதற்காக அங்கு 6 இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து லூபின் என்ற நிறுவனம் செயல்படுகிறது.

லூபின் நிறுவனத்தைச் சோ்ந்த 12 அலுவலா்கள் தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் சுனில் சைந்தானே மற்றும் சதானந்த் சின்சகா் ஆகியோரின் தலைமையில் சனிக்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.

அவா்களுக்கு இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா், விஞ்ஞானி ப. மணிகண்டன் ஆகியோா் விளக்கினா்.

தொடா்ந்து, தவலப்பள்ளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ட்ரைக்கோகிரம்மா என்ற ஒட்டுண்ணி பூச்சியின் உற்பத்தி மையத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.