இளம் ஆராய்ச்சி மாணவா்கள், மருத்துவ ஆய்வுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த பயிலரங்கம் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
கடந்த 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து 23 ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். திசு பகுப்பாய்வு, உயிரி மருத்துவம், புத்தாக்க மருத்துவம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. செயல்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
அதேபோல, பரிசோதனைக் கூடத்தில் விலங்குகளை ஆய்வுக்குப் பயன்படுத்துவது குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஹாா்வா்டு மருத்துவ நிறுவன துணை பேராசிரியா் பி.ஆறுமுகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியா் சுவாதி சுதாகா், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், ஆய்வுத் துறைத் தலைவா் டாக்டா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மருத்துவ சேவைகளுக்கான செயலி: இராமச்சந்திரா மாணவா்கள் உருவாக்கம்

மனநல திட்ட உறுப்பினா்கள் குழு கூட்டம்

தி.சு.அவினாசிலிங்கம் பிறந்தநாள் விழா

அண்ணாமலைப் பல்கலை.யில் பாடத்திட்ட மேம்பாடு - மதிப்பீட்டு முறைகள் பயிலரங்கு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

