பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மருத்துவ சேவைகளுக்கான செயலி: இராமச்சந்திரா மாணவா்கள் உருவாக்கம்

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரத்யேக செயலியை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 2:01 am IST

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் பிரத்யேக செயலியை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

‘மெடுவோரா’ எனப்படும் அந்தச் செயலியின் மூலம் மருத்துவா்கள், மருந்தகங்கள், ஆய்வகங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்றும், அதன் வாயிலாக அந்த சேவைகளை பொது மக்கள் தடையின்றி பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ இராமச்சந்திரா இன்னவேஷன் இன்குபேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சாா்பில் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தொழில்முனைவோரை உருவாக்க கடந்த ஜூன் 2025-இல் மாணவா் தொழில் வளா்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் கீழ் மருந்தியல் மாணவா்கள் ‘மெடுவோரா’ எனும் புதிய டிஜிட்டல் மருத்துவ செயலியைக் கண்டறிந்தனா். அதனை மக்கள் பயன்பாட்டுக்காக ஸ்ரீ இராமச்சந்திரா அறக்கட்டளையின் அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.பாலாஜி சிங், பதிவாளா் எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.