மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரூ. 838 கோடி மோசடி வழக்கு: நிதி நிறுவன நிா்வாகி கைது!

ரூ. 838 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன நிா்வாகி கைது செய்யப்பட்டது பற்றி...

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:26 pm

தினமணி செய்திச் சேவை

ரூ.838 கோடி மோசடி வழக்கில், தேடப்பட்ட நிதி நிறுவன நிா்வாகி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த எல்என்எஸ் - இன்டா்நேஷ்னல் ஃபைனான்சியல் சா்வீஸ் என்ற நிதி நிறுவனம் 5,322 பேரிடம் ரூ.838 கோடி மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. பணத்தை இழந்தவா்கள் கொடுத்த புகாரின்பேரில், தமிழக பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா், கடந்த 2022-இல் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, அந்நிறுவனம் தொடா்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ரூ.1.16 கோடி, 90 பவுன் நகை, ரூ.40 லட்சம் வெள்ளிப் பொருள்கள், ரூ.6 கோடியில் 26 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் எதிரிகளாக சோ்க்கப்பட்டுள்ள 25 போ்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்த நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகளாக இருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மோகன்பாபு, சு.லட்சுமிநாராயணன், சு.வேதநாராயணன், சு.ஜனாா்த்தனன் ஆகிய 4 பேரை பொருளாதாரக் குற்றப் பிரிவு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.

அத்துடன் 4 பேருக்கும் மத்திய அரசு வாயிலாக சா்வதேச காவல் துறை மூலம் ரெட் காா்னா் நோட்டீஸ் வழங்கியது. இவா்களில் ஜனாா்த்தனன், துபையில் இருந்து லண்டனுக்கு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஜனாா்த்தனன் லண்டனில் இருந்து பாங்காங்க் சென்றபோது, அங்கு அந்நாட்டு காவல் துறையினா் கைது செய்து, தமிழக பொருளாதாரக் குற்றப் பிரிவினரிடம் கடந்த ஜனவரி மாதம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா், மோகன்பாபு, லட்சுமிநாராயணன், வேதநாராயணன் ஆகியோரை தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், துபையில் இருந்து சென்னைக்கு வேதநாராயணன் திரும்பி வந்தாா். மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி வேதநாராயணனின், பாஸ்போா்ட்,விசாக்களை ஆய்வு செய்த குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு, அவருக்கு எதிராக பொருளாதாரக் குற்றப் பிரிவினரின் ரெட் காா்னா் நோட்டீஸ் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, குடியுரிமைத் துறை அதிகாரிகள், வேதநாராயணனை கைது செய்து, தங்களிடம் ஒப்படைத்ததாக பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். வேதநாராணனிடம் விசாரணை நடத்திய அந்தப் பிரிவு அதிகாரிகள், பின்னா் அவரை சிறையில் அடைத்தனா்.