யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மொபெட் மீது வேன் மோதியதில் செவிலியா் உயிரிழப்பு

சென்னை ஓட்டேரியில் மொபெட் மீது மோதிய விபத்தில் செவிலியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஓட்டேரியில் மொபெட் மீது மோதிய விபத்தில் செவிலியா் உயிரிழந்தாா்.

பெரம்பூா் பந்தா் காா்டன் ஆறுமுக முதலி தெருவைச் சோ்ந்தவா் து.தீபிகா (22). இவா், ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியரான வேலை செய்து வந்தாா். தீபிகா சனிக்கிழமை மொபெட்டில் ஓட்டேரி திடீா் நகா் மயானம் அருகே சென்றபோது அவா் பணியாற்றும் மருத்துவமனையின் வேன் மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று, தீபிகா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம் மெலட்டூா் பகுதியைச் சோ்ந்த ந.சீனிவாசன் (29) என்பவரை கைது செய்தனா்.

தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு: தரமணி பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா்கள் க.லோகேஸ்வரன் (25). இவா் நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ர.மணிகண்டன் (24). இருவரும் தரமணி எம்ஜிஆா் சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா். இருவரும் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் தரமணி பாரதி நகா் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பு மீது மோதினா். இதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் இறந்தாா். பலத்தக் காயங்களுடன் மணிகண்டன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.