விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி-போடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :4 பிப்ரவரி 2026, 11:17 pm

Chennai

தேனி-போடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளி ஈஸ்வரன் (45). இவா், போடியிலிருந்து தேனியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். தீா்த்தத் தொட்டி முருகன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேன் ஓட்டுநா் கோடாங்கிபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த விஜய் மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.