

சென்னை அருகே மனைவி, இரு மகன்களை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு, தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் சிரஞ்சீவி (56) என்பவர் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், தொழிலில் ஏற்பட்ட இழப்பால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவி, செவ்வாய்க்கிழமை இரவு மனைவி மற்றும் மகன்களை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த நீலாங்கரை காவல்துறையினர், நால்வரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நீலாங்கரை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.