கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

தாயுமானவா் திட்டம்: சென்னையில் 4 நாள்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம்

தாயுமானவா் திட்டத்தின் கீழ், சென்னையில் நான்கு நாள்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 2:46 am IST

தாயுமானவா் திட்டத்தின் கீழ், சென்னையில் நான்கு நாள்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற நவ 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சென்னையில் அண்ணாநகா், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் வழியாக வீடு வீடாக பொருள்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.