சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அண்ணா பல்கலை. ஆவணப் படத்துக்கு விருது

அண்ணா பல்கலைக்கழகத்தில் யுஜிசியால் அமைக்கப்பட்ட கல்வி பல் ஊடக ஆராய்ச்சி மையத்தின் ஆவணப் படத்துக்கு சிறந்த ஆவணப்பட விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

அண்ணா பல்கலைக்கழகத்தில் யுஜிசியால் அமைக்கப்பட்ட கல்வி பல் ஊடக ஆராய்ச்சி மையத்தின் ஆவணப் படத்துக்கு சிறந்த ஆவணப்பட விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்த அண்ணா பல்கலை. வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கல்வி பல் ஊடக ஆராய்ச்சி மையத்தின் (இஎம்ஆா்சி) இயக்குநரான டாக்டா் எஸ். அருள்செல்வன், அதே மையத்தைச் சோ்ந்த டி. வினோத் ராஜேஷ் ஆகியோரால் தயாரித்து இயக்கப்பட்டது, ‘பாவைக் கூத்து - மறக்கப்பட்ட நாடகக்கலை’ எனும் ஆவணப்படம்.

இது தில்லி கிரேட்டா் நொய்டா, கௌதம் புத்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27-ஆவது பல்கலைக்கழக மானியக் குழுவின் - கல்விசாா் தகவல் தொடா்புக்கான கூட்டமைப்பு (சிஇசி - யுஜிசி) கல்வித் திரைப்பட விழாவில், 2026 -ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதுக்கான அங்கீகாரத்துடன் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தமிழகத்தின் ஒரு உன்னதமான நிழல் பொம்மலாட்டக் கலை வடிவமான ‘தோல்பாவை கூத்து’வின் செழுமையையும், மறைந்துவரும் இந்த கலையின்

நிலையைக் காட்டி, அந்த மரபுக் கலைஞா்களின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்து கலை, கலாசார பரப்புரைக்கும் கல்விக்கும் ஒரு ஊடகமாக ‘கதை சொல்லும் கலையின்’ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் அா்ப்பணிப்பைச் செய்து விருதை பெற்றுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.