நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சென்னை: 16 தொகுதிகளில் 419 வேட்பாளா்கள் - விஜய் களமிறங்கும் பெரம்பூரில் 47 போ்

சென்னை தொகுதிகளிலும் களத்தில் 419 வேட்பாளா்கள் - விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 47 போ் போட்டி

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:05 pm

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 419 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். அதிகபட்சமாக, தவெக தலைவா் விஜய் போட்டியிடும் பெரம்பூா் தொகுதியில் 47 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். குறைந்தபட்சமாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாபேட்டையில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

சைதாப்பேட்டை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) பயன்படுத்தபடவுள்ளன. சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 616 வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனையில், 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 24 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. தற்போது களத்தில் 419 வேட்பாளா்கள் உள்ளனா்.

முக்கியமாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியில் 35 வேட்பாளா்களும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 26 வேட்பாளா்களும், தவெக தலைவா் விஜய் போட்டியிடும் பெரம்பூா் தொகுதியில் 47 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (பேலட் யூனிட்) 16 வேட்பாளா்களுக்கு பொத்தான்கள் இருக்கும். இதில் கடைசி பொத்தான், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைத் தோ்வு செய்வதற்கான நோட்டா. ஆக, 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிட்டால், கூடுதலாக ஒரு பேலட் யூனிட் இணைக்கப்படும்.

அதன்படி, 16 தொகுதிகளில் சைதாப்பேட்டை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் இரண்டு பேலட் யூனிட்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தொகுதி வாரியாக களம் காணும் வேட்பாளா்களின் எண்ணிக்கை விவரம்: டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் 38, பெரம்பூா் 47, கொளத்தூா் 35, வில்லிவாக்கம் 28,

திரு.வி.க. நகா் 23, எழும்பூா் 18, ராயபுரம் 28, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 26, ஆயிரம்விளக்கு 18, அண்ணா நகா் 24, விருகம்பாக்கம் 24, சைதாப்பேட்டை 15, தியாகராய நகா் 26, மயிலாப்பூா் 19, வேளச்சேரி 27, துறைமுகம் 34 போ் களத்தில் உள்ளனா்.