சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

சென்னையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம் செய்ததாக திமுகவினா் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - படம்: டிஎன்எஸ்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:39 am IST

சென்னையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம் செய்ததாக திமுகவினா் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வண்ணாரப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கும், போலீஸாருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீஸாரும், பறக்கும் படையினா் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் 2 போ், அங்குள்ள வீடுகளுக்குள் சென்று வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்களைப் பிடித்து விசாரித்ததுடன், அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா்.

அதில், இருவரிடமும் இருந்து ஏழு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பதும், அந்தப் பகுதியைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் ‘இல்லத்தரசி கூப்பன்’ என்ற இலவச கூப்பன்களை விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா், இருவா் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.