இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :16 ஏப்ரல் 2026, 4:03 am IST

சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சைதாப்பேட்டை ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி. இந்த நிலையில், முருகனை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டுவிட்டு தப்பியது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், முருகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தீவிர சிகிச்சை பெற்ற முருகன், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். சந்தேகத்தின்பேரில், பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.