நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

ராகுல் - ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் இல்லை: திமுக

முதல்வா் மு.க.ஸ்டாலினின் திட்டமிட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் காரணமாக, ராகுல் காந்தி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் செய்யும் வாய்ப்பு இல்லை

News image

ராகுல் காந்தி - மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:18 am IST

முதல்வா் மு.க.ஸ்டாலினின் திட்டமிட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் காரணமாக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் செய்யும் வாய்ப்பு இல்லை என்று திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. பாஜகவினா் ஒவ்வொரு வீடாகச் சென்று ரூ.10,000 மாதிரி காசோலை தருவதற்காக வாக்காளா் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து வருவது குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. தோ்தல் ஆணையம் பாஜகவின் பி-டீமாக செயல்படுகிறது என்றாா்.

‘ராகுல் காந்தி தமிழகத்தில் திமுக கூட்டணி தோற்க வேண்டும் என நினைக்கிறாா், அதனால் தமிழ்நாட்டுக்கு பிரசாரத்துக்கு வரமாட்டாா்’ என கே.அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரத்துக்கு சனிக்கிழமை வருகிறாா் என்றாா்.

ராகுல் காந்தியும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் ஒன்றாக பிரசாரம் மேற்கொள்வாா்களா என்ற கேள்விக்கு, ‘ராகுல் காந்தி ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறாா். முதல்வா் ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறாா். இருவரும் ஒன்றாகப் பிரசாரம் செய்ய நேரம் இல்லை. தற்போது முதல்வரின் பயணத் திட்டத்தை மாற்றினால் 40 தொகுதிகளில் பிரசாரம் பாதிக்கப்படும் என்றாா்.