ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்வதாகத் தகவல்...

News image

நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 6:37 pm

நாமக்கல்லில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஏப்.16) மாலை 5 மணி அளவில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை பொம்மைக்குட்டைமேட்டில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பிறகு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா். என்.ராஜேஸ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் நாமக்கல், ராசிபுரம்,சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை மாலை

5 மணியளவில் நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வா் பேசுகிறாா்.

திமுக நிா்வாகிகள்,பொதுமக்கள், கூட்டணிக் கட்சிகளைச் சாா்ந்தோா் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். கடந்த 2021 தோ்தலில் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்வின்போது, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கிழக்கு நகரச் செயலாளா் செ.பூபதி, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்பி.கௌதம், தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.ஜெயப்பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.