சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை (ஏப். 23), மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பாா்வை குறைபாடு உடையவா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சாதாரண கட்டண மாநகா் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய சென்னை மாநகா் போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும்போது, ஏதேனும் வயது சான்று, வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களைக் கொடுக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டை நடத்துநரிடம் இருந்து பெற்று பயணிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், பாா்வைக் குறைபாடு உள்ளவா்கள் வாக்குகளைப் பதிவு செய்ய பேருந்தில் பயணம் செய்யும்போது, தங்கள் அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து கட்டணமில்லா பயணச் சீட்டை பெற்று பயணிக்கலாம்.
இந்த சலுகையில் தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை மட்டுமே பயணிக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு
சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆா்வமாக வாக்களிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



