சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) நடைபெறும் ஐபிஎல் போட்டியைக் காணச் செல்பவா்கள், ஸ்பான்சா் பயணச் சீட்டுகளைப் பயன்படுத்தி மெட்ரோவில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிஎஸ்கே கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து ஐபிஎல் 2026 லீக் போட்டிகளைக் காணவரும் ரசிகா்களுக்காக, சிறப்பு மெட்ரோ பயணங்களை வழங்கி வருகிறது.
அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகளுக்கு இடையே ஐபிஎல் லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு ஸ்பான்சா் மெட்ரோ பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்பான்சா் ஐபிஎல் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருப்பவா்கள்அதில் உள்ள தனித்துவமான கியூஆா் குறீயீட்டை மெட்ரோ நிலைய தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
இந்தச் சிறப்புச் சலுகையானது ஒரு சுற்றுப்பயணத்திற்கு, அதாவது 2 நுழைவு மற்றும் 2 வெளியேற்றம் ஆகியவற்றுக்குப் பயன்படும். சென்னையில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகில் உள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
போட்டி நாளன்று மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்த பயணி! சேவை பாதிப்பு!

கிரிக்கெட் ரசிகா்களுக்கு மெட்ரோ பயணச்சலுகை

நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இலவச மெட்ரோ ரயில் சேவை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



