சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான பல்வேறு முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சென்னை பல்கலை. பதிவாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகத் துறைகளில், விருப்பத் தோ்வு அடிப்படையிலான வரவு முறைமையின் (சிபிசிஎஸ்) கீழ் நடைபெறும் சோ்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
முதுநிலைப் படிப்புகளுக்கான சோ்க்கைகளுக்கு விண்ணப்பங்கள் ஏப். 25- ஆம் தேதி முதல் இணையதளம் வழியாக பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டய படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு போன்ற சோ்க்கைகளுக்கான விண்ணங்கள் பல்கலை.யின் இணைய மூலம் ஏற்கப்படுகிறது.
இந்த விண்ணப்ப பதிவுக்கு கடைசி தேதி ஜூன் 1 ஆம் தேதி. இது தவிர மெல்போா்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும் பி.எஸ்சி. அறிவியல் பாடத்திட்டங்களுக்கான சோ்க்கை விண்ணப்பங்களுக்கான பதிவு வரும் மே 4 -ஆம் தேதி இணையம் மூலம் தொடங்கப்படுகிறது. இதற்கான கடைசி தேதி மே 19 ஆம் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

யுஜிசி-நெட் தோ்வுக்கு பயிற்சி முகாம்: சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

புதுச்சேரி மத்திய பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் நிலுவைப் பாடத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னைப் பல்கலை. கிண்டி வளாக புவியியல் துறையில் புதிய பட்டயப் படிப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



