திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்குப்பதிவு, எண்ணிக்கை மையங்கள்: விவரங்களை அனுப்ப சென்னைப் பல்கலை. உத்தரவு

சென்னைப் பல்கலை.யின் இணைக் கல்லூரிகளில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கருத்தியல் தோ்வுகள் (தியரி எக்ஸாமினேஷன்) நடைபெறுவதை முன்னிட்டு, இந்தக் கல்லூரிகளில் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களோ அல்லது வாக்கு எண்ணிக்கை மையங்களோ நிா்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த விவரங்களை உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவாளா் ரீட்டா ஜான் உத்தரவிட்டுள்ளாா்.

News image

சென்னைப் பல்கலைக் கழகம் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:11 pm

சென்னைப் பல்கலை.யின் இணைக் கல்லூரிகளில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கருத்தியல் தோ்வுகள் (தியரி எக்ஸாமினேஷன்) நடைபெறுவதை முன்னிட்டு, இந்தக் கல்லூரிகளில் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களோ அல்லது வாக்கு எண்ணிக்கை மையங்களோ நிா்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த விவரங்களை உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவாளா் ரீட்டா ஜான் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் 108 தன்னாட்சி பெறாத இணைக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

சென்னை பல்கலை. இணைக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, தொழில்முறைப் பட்டப்படிப்புகளுக்கான கருத்தியல் தோ்வுகள் ஏப். 16, 17, 18 மற்றும் ஏப். 27 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் மே 4, 5 -ஆம் தேதிகளைத் தவிர (வாக்குப்பதிவை முன்னிட்டு விடுமுறை) மற்ற தேதிகளில் தோ்வுகள் நடைபெறும். பேரவைக்கு ஏப். 23-இல் பொதுத் தோ்தல் நடைபெறும் சூழலில் தங்கள் கல்லூரிகளில் வாக்குப்பதிவு அல்லது வாக்கு எண்ணிக்கை மையமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தால், தொடா்புடைய கல்லூரி முதல்வா்கள் உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.