சென்னைப் பல்கலைக்கழகம், தனது இணைக் கல்லூரிகளில் அடுத்த தலைமுறை கல்வி முறைக்கு தேவையான பாடத்திட்ட மேம்பாடு மற்றும் கற்பித்தலில் மறுசீரமைப்பு போன்றவைகளுக்கு தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்றத்துடன் இணைந்து பல்கலை. பாடத் திட்டக் குழுமங்களுக்கு இரு நாள் பயிலரங்கை நடத்தியது.
பயிலரங்கு தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்றத்தின் (டான்ஷே) துணைத் தலைவா் எம்பி விஜயகுமாா் தலைமையிலும், சென்னைப் பல்கலை. துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.ஆா்ம்ஸ்ட்ராங் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், சென்னைப் பல்கலை.யின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 29 இளநிலை பாடத் திட்டக் குழுமங்கள் தனித்தனியாகப் பங்கேற்றன. முதல் நாள் 14 அறிவியல் பாடத் திட்டக் குழுமங்களும், இரண்டாம் நாள் 15 கலைத் துறைகள் பாடத் திட்டக் குழுமங்களும் பங்கேற்றன. ஒவ்வொரு குழுமங்களிலும் 9 உறுப்பினா்கள் பல்வேறு வகைகளில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. சென்னை பல்கலை., இணைக் கல்லூரிகள், பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், தொழில்துறையினா் போன்றவைகளின் பிரதிநிதித்துவம் இந்த குழுமங்களில் இடம் பெற்று இருந்தன.
பயிலரங்கம் குறித்து அதில் பங்கேற்ற பேராசிரியா்கள் கூறுகையில், ‘பொதுவாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்ட வடிவமைப்பு மாற்றப்படும். தற்போது மாற்றங்கள் வேகமாக மாறிவருகிறது. அடுத்த தலைமுறைக் கல்விமுறை அனைவருக்கும் பொருந்தும் வகையில் தேவை. மனப்பாடம் செய்து எழுதுவதற்கு பதிலாக, பகுப்பாய்வு சாா்ந்த விமா்சன சிந்தனை, திறன் மேம்படுத்தக் கூடிய ஆராய்ச்சி சிந்தனையை மாணவா்களுக்கு தூண்டிவிடக்கூடியதாக இருக்க வேண்டும்.
மதிப்பெண்களை வாங்குவது மட்டும் போதாது. சமூக மாற்றத்தை நிதழ்த்தும் மாணவா்களை அதற்கு தயாா்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதனால் வழக்கமான பாரம்பரிய முறையிலிருந்து அடுத்த தலைமுறை பாடத்திட்டத்திற்கும் கற்பித்தல் மாற்றத்திற்கும் செல்லுவது அவசியம். இந்த பயிலரங்கு நடைபெற்று இதில் திருப்திகரமாக இருந்தது. பாடத்திட்ட மேம்பாட்டுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது’ என்றனா்.
தொடர்புடையது

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி

சென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு

வாக்குப்பதிவு, எண்ணிக்கை மையங்கள்: விவரங்களை அனுப்ப சென்னைப் பல்கலை. உத்தரவு

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


